வீரர்களுடன் விளையாடும் நாய் வடிவிலான இயந்திரம் (ரோபோ) படம் - ஐபிஎல்
செய்திகள்

ஐபிஎல் அறிமுகப்படுத்திய நாய் வடிவிலான கேமரா ரோபோ!

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில் புதிதாக நாய் வடிவிலான கேமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில், புதிதாக நாய் வடிவிலான கேமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இந்த இயந்திர நாய் விளையாடும் விடியோவை ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

அந்த விடியோவில், நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் டேனி மோரிசன், இந்த இயந்திர நாயை அறிமுகம் செய்து வைக்கிறார். மிகுந்த திகைப்புடனும், அச்சம் கலந்த மகிழ்ச்சி உடனும் இயந்திர நாயுடன் வீரர்கள் பேசுவது, விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில், வீரர்கள் செய்யும் சைகளைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதோடு மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியபப்டுத்துகிறது.

கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வீரர்களின் செயல்கள் அனைத்தும் நாயின் பார்வையிலும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடித்துள்ளது.

ஐபிஎல் ஒளிபரப்பு குழுமத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாய் வடிவிலான இயந்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் ஐபிஎல் கேட்டுள்ளது. இதில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | தில்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு அபராதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை 7 போ் கைது: காா் பறிமுதல்

தீபாவளி: நாமக்கல் வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி: களைகட்டிய கடை வீதிகள்

மரக்காணம் அருகே கொத்தனாா் அடித்துக் கொலை!

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

SCROLL FOR NEXT