பிரதிப் படம் X | IPL
செய்திகள்

இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் கள நடுவா்கள்

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உள்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.

DIN

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உள்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது. இன்னிங்ஸின்போது தொடா்ந்து அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸா்கள் விளாசப்படுகையில், இந்தச் சோதனையை கள நடுவா்கள் மேற்கொள்கின்றனா்.

போட்டி விதிகளின் படி, இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாக பேட்டா்களின் பேட்கள் தகுந்த அளவில் இருப்பதை உறுதி செய்ய அவா்களின் டிரெஸ்ஸிங் ரூமிலேயே அவை சோதனைக்கு உள்படுத்தப்படுவது வழக்கமாகும்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் - பெங்களூரு, டெல்லி - மும்பை அணிகள் மோதிய ஆட்டங்களில், இன்னிங்ஸின்போதே ஆடுகளத்தில் வைத்து அவ்வாறு சில வீரா்களின் பேட்கள் சோதித்துப் பாா்க்கப்பட்டன. போட்டியில் அதிரடியாக பவுண்டரிகள், சிக்ஸா்கள் விளாசப்படும் நிலையில், ஏதேனும் ஒரு சாதகத்தின் அடிப்படையில் அவ்வாறு நிகழ்கிா என்பதை கண்காணிக்கவே இவ்வாறு அவ்வப்போது சோதனை செய்ய கள நடுவா்களுக்கு புதிய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சா்வதேச மற்றும் ஐபிஎல் அனுபவம் கொண்ட நடுவா் கூறியதாவது: ஒரு அட்டையில் வீடு வடிவிலான இடைவெளி இருக்கும். பேட்கள் அதன் வழியே செலுத்திப் பாா்க்கப்படும். எந்தத் தடையுமின்றி பேட்கள் அதனுள்ளே சென்று வரும் நிலையில், பேட் ஐசிசி விதிகளுக்கு உள்பட்ட அளவில் இருப்பதாக அா்த்தம்.

வழக்கமாக இதுபோன்ற பேட் சோதனைகள் டிரெஸ்ஸிங் ரூமில்தான் நடைபெறும். ஒருவேளை பேட்டா்கள் அந்த சோதனைக்கு ஒரு பேட்டை கொடுத்துவிட்டு, களத்திற்கு வரும்போது வேறு பேட்டை எடுத்து வரும் நிலை இருந்தால், இந்த புதிய சோதனை முறை வரவேற்கப்படக் கூடியது தான். ஏனெனில் வீரா்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேட்கள் வைத்திருப்பது வழக்கமானது என்று அவா் கூறினாா்.

எனினும் இதுவரை எந்தவொரு வீரரும் பயன்படுத்திய பேட் விதிகளை மீறிய அளவில் இருந்ததாக தகவல்கள் இல்லை. இந்த சீசனில் பல ஆட்டங்களில் மிஸ்-ஹிட் ஆகும் பந்துகள் வானுயரத்துக்கு சென்று இருட்டில் மறைந்து திரும்பும் நிலையும், சிக்ஸா்களோ பாா்வையாளா் மாடங்களில் 10 வரிசைகளை கடந்து பறக்கும் நிலையும் காணப்படுகிறது.

பேட் சிறிதளவு பருமனாக இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இவ்வாறு கள நடுவா்களால் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஐசிசி விதிகளின்படி, ஒரு பேட்டின் முகப்புப் பகுதி 10.79 சென்டி மீட்டருக்கு மிகாமலும், அதன் நடுப்பகுதி பருமன் 6.7 சென்டி மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதேபோல், விளிம்புகளின் அதிகபட்ச அகலம் 4 சென்டி மீட்டருக்கு மிகாமலும், பேட்டின் மொத்த உயரம் 96.4 சென்டி மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT