போர்ஜா இக்லெசியாஸ், ரபீனியா. படங்கள்: ஏபி, எக்ஸ் / லா லீகா.
செய்திகள்

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

DIN

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது.

பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களில் செல்டா டி விகோ அணி வீரர் போர்ஜா இக்லெசியாஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

பார்சிலோனா அணி 12, 65, 68ஆவது நிமிஷங்களில் முறையே ஃபெர்ரன் டோரஸ், டானி ஓல்மோ, ரபீனியா கோல் அடித்தார்கள்.

போட்டி சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில் மீண்டெழுந்த பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் ரபீனியா 90+8ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார்.

ரபீனியாவை கட்டிப் பிடித்த பார்சிலோனா பயிற்சியாளர்.

பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ஹன்சி பிளிக் ஓடிவந்து ரபீனியாவைக் கட்டிப் பிடித்தார்.

இதன்மூலம் 4-3 என பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது. மொத்தம் 38 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் பார்சிலோனா அணி 32 போட்டிகளில் 73 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

கடந்த சீசனில் 95 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் கடைசியாக சில போட்டிகளில் சறுக்கலில் ஈடுபட்டு வருகிறது.

லா லீகா புள்ளிப் பட்டியல்

1. பார்சிலோனா - 32 போட்டிகள் - 73 புள்ளிகள்

2. ரியல் மாட்ரிட் - 31 போட்டிகள் - 66 புள்ளிகள்

3. அத்லெடிகோ மாட்ரிட் - 32 போட்டிகள் - 63 புள்ளிகள்

4. அத்லெடிகோ கிளப் - 31 போட்டிகள் - 57 புள்ளிகள்

5. வில்லாரியல் - 30 போட்டிகள் - 51 புள்ளிகள்

6. ரியல் பெட்டிஸ் - 31 போட்டிகள் - 48 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT