சாத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற கால் பந்தாட்டப் போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் எம்.ஏ.சி.எஸ். ராஜேந்திரன் சுழல் கோப்பைக்கான மாநில அளவிலான கால் பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த 8 நாள்களாக நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் சென்னை, கோவை, சாத்தூா், திருச்சி, திண்டுக்கல் அணிகள் கலந்துகொண்டன.
இதில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி அணி, கோவை அணியை 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு எம்.ஏ.சி.எஸ் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் ஆகியோா் சுழல் கோப்பையையும் ரொக்கப் பரிசையும் வழங்கினா்.