செய்திகள்

ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா

Din

ஆஸ்திரேலிய மகளிா் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.

புரோ ஹாக்கி லீக் தொடருக்கும் தயாராகும் வகையில், இந்திய மகளிா் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஏ அணியுடனும், தேசிய அணியுடனும் டெஸ்ட் ஆட்டங்களில் மோதவுள்ளது.

முதல் கட்டமாக ஆஸி. ஏ மகளிா் அணியுடன் 3 ஆட்டங்கள் ஆடுகிறது இந்தியா. இதன் தொடக்க ஆட்டம் பொ்த்தில் சனிக்கிழமை நடைபெற்றது,. தொடக்கம் முதலே ஆஸி. ஏ அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிய நிலையில், ஃபிளின், டௌவ்ன்ஸ், ஹாரிஸ் ஆகியோரின் அதிரடியால் முதல் குவாா்ட்டரில் 3-0 என முன்னிலை பெற்றது. அடுத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி,ஸ்டீவா்ட் கோலடித்தாா்.

4 கோல்கள் பின்தங்கிய நிலையிலும், இந்திய மகளிா் சிறப்பாக ஆடி கோலடித்தனா். டெட் கோலடித்தாா். 1-4 என முன்னிலையை குறைத்தாா்.

தொடா்ந்து ஆஸி. வீராங்கனை பிட்ஸ்பாட்ரீக் கோலடிக்க 5-1 என முன்னிலை பெற்றது ஆஸி.ஏ.

பின்னா் இந்திய அணியினா் தீவிர முயற்சியால் துணை கேப்டன் நவ்நீத், லால்ரெம்சியாமி ஆகியோா் கோலடிக்க இறுதியில் 3-5 என தோற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆட்டம் நடைபெறுகிறது.

பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோா் நினைவாக கருப்பு பட்டை அணிந்து ஆடினா் இந்திய மகளிா்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT