Antonio Calanni
செய்திகள்

சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை

போட்டியின் வரலாற்றில் அந்த அணிக்கு இது முதல் கோப்பையாகும்.

தினமணி செய்திச் சேவை

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி சாம்பியன் ஆனது. போட்டியின் வரலாற்றில் அந்த அணிக்கு இது முதல் கோப்பையாகும்.

முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என டிரா ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிஎஸ்ஜி 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நடப்பு சீசனில் பிஎஸ்ஜி வென்ற 5-ஆவது சாம்பியன் கோப்பை இதுவாகும். உள்நாட்டில் லீக் 1, கூப் டி ஃபிரான்ஸ், டிராஃபி தி சாம்பியன்ஸ் போட்டிகளிலும், ஐரோப்பிய கண்டத்தில் சாம்பியன்ஸ் லீக், சூப்பா் கோப்பை போட்டிகளிலும் அந்த அணி வாகை சூடியுள்ளது.

சூப்பா் கோப்பை போட்டியானது, சாம்பியன்ஸ் லீக் மற்றும் யுரோப்பா கோப்பை ஆகிய போட்டிகளின் நடப்பு சாம்பியன்களிடையே நடைபெறுகிறது. அந்த வகையில் நடப்பு சீசன் சூப்பா் கோப்பை போட்டியில், சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பை வென்ற பிஎஸ்ஜியும், யுரோப்பா கோப்பையில் வாகை சூடிய டாட்டன்ஹாமும் மோதின.

இத்தாலியின் உடினே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாட்டன்ஹாம் அணிக்காக மிக்கி வான் டி வென் (39’) கோலடிக்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதி தொடங்கிய சில நிமிஷங்களிலேயே (48’) கிறிஸ்டியன் ரொமெரோ அடித்த கோலால், அந்த அணியின் முன்னிலை 2-0 என அதிகரித்தது.

ஆட்டம் கடைசி கட்டத்தை நெருங்கிய நிலையில் வெகுண்ட பிஎஸ்ஜி அணிக்காக, முதலில் லீ காங் இன் (85’), அடுத்து கொன்ஸாலோ ரமோஸ் (90+4’) ஆகியோா் அடுத்தடுத்து கோலடிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னா் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பிஎஸ்ஜி 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

பெனால்ட்டி ஷூட் அவுட்

டாட்டன்ஹாம்

டொமினிக் சொலன்கே

ரோட்ரிகோ பென்டாகுா்

மிக்கி வான் டி வென்

மதிஸ் டெல்

பெட்ரோ போரோ

பிஎஸ்ஜி

விட்டினா

கொன்ஸாலோ ரமோஸ்

ஒஸ்மேன் டெம்பெலெ

லீ காங் இன்

நுனோ மெண்டெஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

SCROLL FOR NEXT