ஆசிய சாம்பியன்ஸ் லீக் பட்டியல், ரொனால்டோ.  படங்கள்: எக்ஸ் / எஃப்சி கோவா, அல்-நாஸர்.
செய்திகள்

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

இந்தியாவுக்கு வரவிருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தியாவின் எஃப்சி கோவா அணிக்கு எதிராக விளையாட இந்தியா வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட இந்திய கால்பந்து கிளப்பான மோகன் பகான், எஃப்சி கோவா அணிகள் தேர்வாகியுள்ளன.

குரூப் சி பிரிவில் மோகன் பகானும் குரூப் டி பிரிவில் எஃப்சி கோவா அணியும் தேர்வாகி உள்ளன.

ரொனால்டோவின் அல்-நாஸர் கிளப் அணியும் குரூப் டி பிரிவில் இருக்கிறது.

ஆசிய கால்பந்து கழகம் (ஏஎஃப்சி) நடத்தும் இந்தத் தொடர் ஆசியாவிலேயே மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கிறது.

மோகன் பகான் ஐஎஸ்எல் தொடரில் ஷீல்டு கோப்பையை வென்றதால் நேரடியாக தேர்வாகியுள்ளது.

எப்ஃசி கோவா அணி சூப்பர் கோப்பையை வென்று பிளே-ஆஃப் சுற்றில் மோதி இடம் பிடித்துள்ளது.

32 அணிகள் மோதும் இந்தப் போட்டிகள் வரும் செப்.16ஆம் தேதி தொடங்குகிறது.

ஹோம், அவே என போட்டிகள் நடைபெறுவதால் ரொனால்டோ எஃப்சி கோவா உடன் மோத நிச்சயமாக இந்தியா வருவார் எனக் கணிக்கப்படுகிறது.

ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 2025-26

  • குரூப் ஏ: அல் வாஸ்ல் எஃப்சி, எஸ்டெக்லால் எஃப்சி, அல் முஹரக் எஸ்சி, அல் வெஹ்தத்

  • குரூப் பி: அல் அஹ்லி எஸ்சி, பிஎஃப்சி ஆண்டிஜோன், எஃப்சி அர்கடாக், அல் கல்டியா எஸ்சி

  • குரூப் சி: மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட், செபஹான் எஸ்.சி., அல்-ஹுசைன் எஸ்சி, அஹல் எப்.சி.

  • குரூப் டி : எஃப்சி கோவா, அல்-நாஸர், அல்-ஜவ்ரா, எஃப்சி இஸ்டிக்லோல்

  • குரூப் இ : பெய்ஜிங் எஃப்சி, மகர்தூர் எஃப்சி, டாய் போ எப்சி, காங் அன் ஹா நொய் எப்சி

  • குரூப் எஃப் : பாங்காக் யுனைடெட், சிலாங்கூர் எஃப்சி, லயன் சிட்டி சைலர்ஸ் எப்சி, பெர்சிப் பாண்டுங்

  • குரூப் ஜி: காம்பா ஒசாகா, நாம் டின் எஃப்சி, ரட்சபுரி எஃப்சி, ஈஸ்டர்ன் எப்சி

  • குரூப் எச். : எஃப்சி போஹாங் ஸ்டீலர்ஸ், பிஜி பாத்தும் யுனைடெட், காயா எஃப்சி-இலோய்லோ, டாம்பைன்ஸ் ரோவர்ஸ் எஃப்சி

Famous football player Cristiano Ronaldo is expected to come to India to play against Indian team FC Goa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

SCROLL FOR NEXT