நெய்மர் விளையாடும் சன்டோஷ் எஃப்சி அணி 0-6 என மோசமாக தோல்வியடைந்ததிற்கு அவரது மகன் ஆற்றுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (33) தற்போது அவரது சிறுவயது அணியான சன்டோஷ் எஃப்சியில் விளையாடி வருகிறார்.
நெய்மர் கால்பந்து வாழ்வில் மோசமான தோல்வி...
நேற்றைய போட்டியில் அவரது அணி வாஸ்கோடகாமா அணியிடம் 0-6 என மோசமாக தோல்வியடைந்தது.
இந்தத் தோல்வியால் நெய்மர் களத்திலேயே அழுதது சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், அவரது 13 வயது மகன் டாவி லூக்கா அவரை ஆற்றுப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
இதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நெய்மர் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பா...
மாலை வணக்கம் அப்பா. இன்று உங்களுக்கும் எனக்கும் கடினமான நாள் என்று எனக்குத் தெரியும். இந்தக் கடினமாக நேரத்தில் உங்கள் பக்கம் யாருமே இருக்கவில்லை என நினைக்காதீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக உங்கள் பக்கம் இருக்கிறேன்.
சிறந்த தந்தை என்பதைவிட நீங்கள் மேலானவர். நீங்கள் எனது குரு. நீங்கள்தான் எனது முன்மாதிரி. நீங்கள் அழும்போதும் எனக்கு உங்களை அதிகமாக பிடிக்கும் என்பதை நினைவுப்படுத்துகிறேன். இதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் யாரென்று தெரியாத மனிதர்களுக்காக உங்களது மிகப்பெரிய கனவை விட்டுவிடாதீர்கள். இன்றைய தோல்வி தற்காலிகமானது, நிரந்தரமானதல்ல. இதைத் தோல்வியாக நினைக்காமல் ஊக்கமாக எடுத்துக்கொண்டு நேற்றைவிட சிறப்பானவராக மாறுங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.