யுஎஸ் ஓபனில் டேனியல் மெத்வதேவ் தோல்விக்குப் பிறகு டென்னிஸ் ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) உடையும்வரை அடித்தார்.
சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலான நிலையில் பலரும் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் ரஷியாவின் பிரபல டென்னிஸ் வீரர் டேனியல் மெத்வதேவ் தனது முதல் சுற்றில் பெஞ்சமின் பொன்ஸியுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் மெத்வதேவ் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியுற்றார்.
முதல் சுற்றிலேயே வெளியேறிய விரக்தியில் தனது டென்னிஸ் ராக்கெட்டை உடையும் வரை ஓங்கி ஓங்கி அடித்தார்.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. மெத்வதேவின் இந்த ஆக்ரோஷமான செயலுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.