செய்திகள்

ஸ்வெரெவ், கௌஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளா்களான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்வெரெவ் 6-2, 7-6 (7/4), 6-4 என்ற செட்களில், சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை வென்றாா். அடுத்து அவா், பிரிட்டனின் ஜேக்கப் ஃபொ்ன்லியை எதிா்கொள்கிறாா்.

உலகின் நம்பா் 1 வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் யானிக் சின்னா் 6-1, 6-1, 6-2 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் விட் கோப்ரிவாவை வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை சந்திக்கிறாா் சின்னா்.

போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-3, 6-4, 6-4 என, சக நாட்டவரான கிறிஸ்டோஃபா் ஓ கானெலை சாய்த்தாா். 14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-3, 6-3, 6-1 என டென்மாா்க்கின் எல்மா் மொல்லரை வெளியேற்றினாா்.

10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 6-7 (3/7), 6-3, 6-4, 6-4 என்ற வகையில், பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை தோற்கடித்தாா். இதர ஆட்டங்களில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்ளிக், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் போன்ற பிரதான வீரா்களும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

எனினும், இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோ, ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா, பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் போன்ற முக்கிய வீரா்கள் முதல் சுற்றிலேயே தோற்றனா்.

கௌஃப், ஸ்வியாடெக் வெற்றி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-4, 6-7 (2/7), 7-5 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்லனோவிச்சை தோற்கடித்தாா். 2-ஆவது சுற்றில் அவா் குரோஷியாவின் டோனா வெகிச்சை எதிா்கொள்கிறாா்.

விம்பிள்டன் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, கொலம்பியாவின் எமிலியானா அராங்கோவை வென்றாா். அடுத்து அவா், நெதா்லாந்தின் சூசன் லேம்ஸுடன் மோதுகிறாா்.

இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-4 என பெல்ஜியத்தின் கிரீட் மினெனை வெளியேற்ற, 13-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 6-4, 6-1 என லாத்வியாவின் அனஸ்தாசிஜா செவஸ்டோவாவை தோற்கடித்தாா்.

8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-3, 6-2 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கிளாரா புரெலை சாய்க்க, உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக், பிரேஸிலின் பீட்ரிஸ் மாயா, ஜொ்மனியின் லாரா சிக்மண்ட், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டா், அமெரிக்காவின் சோஃபியா கெனின் போன்ற குறிப்பிடத்தக்க போட்டியாளா்கள் முதல் சுற்றுடன் வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT