ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று மனு பாக்கர் மிகவும் புகழ்பெற்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதலில் அவர் கலந்துகொண்டு 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
இந்நிலையில், இது குறித்து மனு பாக்கர் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் நிறைவு செய்தேன். தனித்துவமான சூழ்நிலையில் இதில் போட்டியிட்டேன். இருப்பினும் எனது சிறப்பான செயல்பாடுகளை வழங்கினேன். எனது அணியின் சிறப்பான உழைப்பினை மனமாறப் பாராட்டுகிறேன்.
நாங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற கூடுதலாக உழைப்போம். ஜெய் ஹிந்த்.
பின் குறிப்பு- முதல் புகைப்படம், சில அற்புதமான நினைவுகளுக்கு ராஹி சர்னோபத் அக்காவுக்கு மிக்க நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நாளை (ஆக.29) முடிவடைய இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.