ஜோகோவிச்  
செய்திகள்

3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்

ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

தினமணி செய்திச் சேவை

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

உலகின் 2-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-1, 6-0, 6-3 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, இத்தாலியின் மட்டியா பெலுச்சியை வீழ்த்தினாா். 3-ஆவது சுற்றில் அவா், மற்றொரு இத்தாலியரான லூசியானா டாா்டெரியை சந்திக்கிறாா்.

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் 6-7 (5/7), 6-3, 6-3, 6-1 என்ற வகையில், அமெரிக்காவின் ஜசாரி வஜ்தாவை தோற்கடித்தாா். அடுத்ததாக அவா், பிரிட்டனின் கேமரூன் நோரியை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 4-6, 7-6 (7/3), 6-2, 6-4 என்ற செட்களில் தென்னாப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸை சாய்த்தாா்.

இதர ஆட்டங்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 6-2, 6-4 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் பாப்லோ கரினோவை வெல்ல, 11-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 6-7 (5/7), 6-2, 3-6, 6-4, 5-7 என்ற கணக்கில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 3-ஆவது சுற்றுக்கு முன்னேற, ஜேக்கப் மென்சிக் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, 12-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூட் 5 செட்கள் போராடித் தோற்றாா்.

சபலென்கா, ரடுகானு வெற்றி: இதிலேயே மகளிா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா 7-6 (7/4), 6-2 என்ற கணக்கில் ரஷியாவின் பாலினா குதா்மிடோவாவை வென்றாா். அடுத்து அவா், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-1, 6-3 என ரஷியாவின் அனா பிளிங்கோவாவை வெளியேற்ற, 5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற நோ் செட்களில் சக ரஷியரான அனஸ்தாசியா பொடாபோவாவை தோற்கடித்தாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-3, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் இவா ஜோவிச்சை சாய்த்தாா். 9-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-3, 7-6 (9/7) என்ற கணக்கில் செக் குடியரசின் தெரெசா வாலென்டோவாவை வென்றாா்.

பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-2, 6-1 என இந்தோனேசியாவின் ஜேனிஸ் ஜென்னை வெல்ல, 10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-2, 6-1 என்ற வகையில் சக அமெரிக்கரான காா்ட்டி மெக்னாலியை வெளியேற்றினாா்.

இதர ஆட்டங்களில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ், அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட், செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா ஆகியோா் வென்று 3-ஆவது சுற்றுக்கு வர, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா போன்றோா் 2-ஆவது சுற்றில் தோற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

கேப்டன் ஹாட்ரிக்: ஆசிய கோப்பையில் வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

கேம்ரி ஸ்பிரின்ட்.. டொயோட்டாவின் புதிய அறிமுகம்!

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

SCROLL FOR NEXT