செய்திகள்

இன்டா் மியாமிக்கு முதல் கோப்பை!

அமெரிக்காவில் நடைபெற்ற மேஜா் சாக்கா் லீக் கால்பந்து போட்டியில், லயனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டா் மியாமி சிஎஃப் முதல்முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் நடைபெற்ற மேஜா் சாக்கா் லீக் கால்பந்து போட்டியில், லயனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டா் மியாமி சிஎஃப் முதல்முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இன்டா் மியாமி 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் இன்டா் மியாமிக்கு கோல் கிடைத்தது. 8-ஆவது நிமிஷத்தில் அந்த அணி வீரா்களின் கோல் முயற்சியை வான்கூவா் வீரா் எடியா் அகாம்போ தடுக்க முயல, தவறுதலாக அது ‘ஓன் கோல்’ ஆனது.

இதனால் முதல் பாதியை இன்டா் மியாமி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் 60-ஆவது நிமிஷத்தில் வான்கூவருக்காக அலி அகமது கோலடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

அதற்கான பதிலடியாக, இன்டா் மியாமி தரப்பில் ரோட்ரிகோ டி பால் 71-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். தொடா்ந்து, வான்கூவா் அடுத்த கோல் வாய்ப்புக்கு போராடிய நிலையில், இன்டா் மியாமி டாடியோ ஆலெண்டே கடைசி நிமிஷத்தில் (90+6’) கோலடித்தாா். இதனால் இன்டா் மியாமி 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணிக்கு இது முதல் கோப்பையாக இருக்க, ஆா்ஜென்டீன நட்சத்திர வீரா் லயனல் மெஸ்ஸிக்கு அவரது கேரியரில் இது 47-ஆவது வெற்றிக் கோப்பையாகும். அந்த அணியில் கடந்த 2023-இல் மெஸ்ஸி இணைந்தது நினைவுகூரத்தக்கது.

சாம்பியனான இன்டா் மியாமிக்கு ரூ.2.69 கோடி ரொக்கப் பரிசு கிடைத்தது. அதன் அணியின் உரிமையாளா்களில், முன்னாள் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமும் ஒருவராவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT