கோப்பை வென்ற மெஸ்ஸிக்கு முத்தமிடும் இன்டர் மியாமியின் உரிமையாளர்.  படம்: ஏபி
செய்திகள்

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

லியோனல் மெஸ்ஸி வென்ற விருதுகள், பதக்கங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

லியோனல் மெஸ்ஸி தனது 48-ஆவது பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

இன்டர் மியாமி அணி முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வெல்ல மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) பார்சிலோனா எஃப்சி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பின்னர் பிஎஸ்ஜி அணியில் இருந்து இன்டர் மியாமி அணிக்கு கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார்.

எம்எல்எஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கெவர் அணியை 3-1 என வீழ்த்தியது. இதில் மெஸ்ஸி 2 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 48-ஆவது கரியர் பட்டத்தை வென்ற முதல் வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த சீசனில் எம்எல்எஸ் தொடரின் மதிப்பு மிக்க வீரர் விருதையும் வென்றார். மேலும், தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதையும் வென்று அசத்தினார்.

இதுவரை மெஸ்ஸி வென்ற கோப்பைகள்

ஆர்ஜென்டீனா - 6 கோப்பைகள்

பார்சிலோனா - 35 கோப்பைகள்

பிஎஸ்ஜி - 3 கோப்பைகள்

இன்டர் மியாமி - 4 கோப்பைகள்

Lionel Messi has won his 48th title.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT