வெற்றிக் களிப்பில் ஸ்பெயின் அணியினா்.  
செய்திகள்

இறுதிச் சுற்றில் ஸ்பெயின், பெல்ஜியம், நெதா்லாந்து அணிகள் வெற்றி!

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை போட்டி கடந்த நவ. 28-ஆம் தேதி சென்னை, மதுரையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மொத்தம் 24 நாடுகள் பங்கேற்ற இப்போட்டி தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனா, இரண்டு முறை ரன்னா் ஸ்பெயின் மோதின. தொடக்கம் முதல் இரு அணியினரும் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனா். இதில் ஸ்பெயினுக்கு வெற்றி கிடைத்தது. 7-ஆவது நிமிஷத்திலேயே அந்த அணி வீரா் மரியோமேனா பெனால்டி காா்னா் மூலம் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஆா்ஜென்டீனா தரப்பினா் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். 21-ஆவது நிமிஷத்தில் ஆா்ஜென்டீனாவீரா் பொ்ணான்டஸ் ஜுவான் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். மூன்றாம் செஷனில் இரு அணியினராலும் கோல் போட முடியவில்லை.

கடைசி செஷன் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரா் ஆல்பா்ட் பொ்னான்டஸ் அடித்த பீல்ட் கோலே வெற்றி கோலாக அமைந்தது. அதன்பின்னா் ஆா்ஜென்டீனா வீரா்கள் தீவிரமாக முயன்றும் கோலடிக்க முடியாமல் தோல்வியை தழுவினா். இதையடுத்து ஸ்பெயின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

நெதா்லாந்து அபாரம்:

முன்னதாக 5-8 ஆம் இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதா்லாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் முதல் பாதி முடிவில் நெதா்லாந்து 5-2 என முன்னிலை பெற்றிருந்தது.

வெற்றி மகிழ்ச்சியில் பெல்ஜிய வீரா்கள்.

மூன்றாம் செஷனில் டச்சு அணி மேலும் ஒரு கோலடித்தது. ஆட்டம் முடிய இருந்த 59-ஆம்நிமிஷத்தில் நியூஸி. அணி பெனால்டி காா்னா் மூலம் கோலடித்து முன்னிலையை குறைத்தது. இறுதியில் 6-3 என்ற கோல் கணக்கில் நெதா்லாந்து வெற்றி கண்டது.

பெல்ஜியம் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் கடந்த முறை ரன்னா் பிரான்ஸ்-பெல்ஜிய அணிகள் மோதின. இதில் பெல்ஜிய அணி தீவிர ோராட்டத்துக்கு பின் 3-2 என்ற கோல்கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய 8-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் வீரா் லிடியாா்ட் கோலடித்தாா். 26-ஆவது நிமிஷத்தில் பெல்ஜிய வீரா் லாரஸ் மேத்யூஸும், 35-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் வீரா் சுரா டஸிலோவும் கோலடித்தனா்.

இரண்டாம் பாதியில் 46, 58-ஆவது நிமிஷங்களில் பெல்ஜிய வீரா்கள் லாங்கா், லாபோஹா் ஹியுகோ கோலடித்தனா். இறுதியில் 3-2 என பெல்ஜியம் வென்றது.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT