விராட் கோலி - ரோஹித் சர்மா. படம்: ஏபி
செய்திகள்

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

தினமணி செய்திச் சேவை
  • இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அறிமுக காமன்வெல்த் கோகோ சாம்பியன்ஷிப்பில், 24-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கின்றன.

  • ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், பேட்டர்கள் பிரிவில் இந்தியாவின் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 2-ஆம் இடத்தைப் பிடித்தார். ரோஹித் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். பௌலர்கள் பிரிவில் குல்தீப் யாதவ், 3-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  • இந்திய அணியின் முன்னாள் பேட்டரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், இங்கிலாந்தில் நடைபெறும் ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியின் லண்டன் ஸ்பிரிட் அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

  • பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் விளையாட, ஆஸ்திரேலியா அந்நாட்டுக்கு ஜனவரியில் செல்லும் நிலையில், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆஸ்திரேலிய குழு ஆய்வு செய்து வருகிறது.

  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பயர்ன் மியுனிக் - ஸ்போர்டிங்கையும் (3-1), லிவர்பூல் - இன்டர் மிலனையும் (1-0), பார்சிலோனா - எய்ன்ட்ராட் ஃப்ராங்க்ஃபர்டையும் (2-1), அட்லெடிகோ மாட்ரிட் - பிஎஸ்வியையும் (3-2), அடாலென்டா - செல்ஸியையும் (2-1) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் ஆர்ஏசி பயணிகளுக்கு பாதி கட்டணம் மட்டுமே..! நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

இது தெரியுமா? புலி பெரும்பாலும் பின்பக்கமாகவே தாக்குவது ஏன்?

கடும் காய்ச்சலுடன் இறுதிப்போட்டியில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா!

100 நாள் வேலை திட்டத்தில் சதி: பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சனம்

பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT