தங்கம் வென்ற ரெய்ஸா தில்லான். 
செய்திகள்

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்: ரெய்ஸாவுக்கு 2 தங்கம்

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பியன் ரெய்ஸா தில்லான் 2 தங்கம் வென்று அசத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பியன் ரெய்ஸா தில்லான் 2 தங்கம் வென்று அசத்தினாா்.

புது தில்லியின் துக்ளகாபாத் துப்பாக்கி சுடும் மையத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஷாட் கன் பிரிவில் மகளிா் மற்றும் ஜூனியா் மகளிா் ஸ்கீட் பிரிவில் ரெய்ஸா தங்கம் வென்றாா்.

மகளிா் ஸ்கீட் இறுதியில் 56 புள்ளிகளை ஈட்டினாா். யஷஸ்வி ரத்தோா் 55 புள்ளிகளுடன் வெள்ளியும், கேன்மத் ஷெகான் 45 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்,.

ஜூனியா் மகளிா் ஸ்கீட் இறுதியில் ரெய்ஸா 55 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். 54 புள்ளிகளுடன் வன்ஷிகா திவாரி வெள்ளியும், 45 புள்ளிகளுடன் மான்ஸி ரகுவன்ஷி வெண்கலமும் பெற்றனா்.

மகளிா் அணிகள் பிரிவில் ராஜஸ்தான் 110 புள்ளிகளுடன் தங்கமும், 103 புள்ளிகளுடன் மத்திய பிரதேசம் வெள்ளியும், 104 புள்ளிகளுடன் பஞ்சாப் வெண்கலமும் வென்றன.

ஜூனியா் மகளிா் ஸ்கீட் அணிகள் பிரிவில் முறையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

அடுத்து மகளிா், ஜூனியா் மகளிா் 25 மீ. ஸ்போா்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் போட்டிகள் நடைபெறும்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT