ஈக்வடாரில் இருக்கும் பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் (33 வயது) கடை வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதே இடத்தில் உயிரிழந்திருக்கும் அடையாளம் காணாத மற்றுமொரு உடலைக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட வீரர் யார்?
மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சர்வதேச அளவில் பார்சிலோனா டி குவாயாகில் என்று அழைக்கப்படும் பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் டிஃபெண்டராக இருக்கிறார்.
இவர் தனது கால்பந்து பயணத்தை இன்டிபென்டியென்ட் டெல் வாலே கிளப்பில் (2010- 2015) தொடங்கினார். அடுத்து 2016- 2025 வரை பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் ஒப்பந்தம் ஆனார்.
இதற்கிடையில் லோன் அடிப்படையில் ப்ளூமினென்ஸ் எஃப்சி மற்றும் கிளப் டிபார்டிவோவிலும் விளையாடியுள்ளார்.
இவரது கொலைக்கு கிளப் அணியினரும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.
ஈக்வடாரில் அதிகரிக்கும் கொலைகள்...
காவல்துறையினர் இந்தக் கொலை குறித்து ஏதும் தகவலைக் கூறாமல் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளார்.
ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டில் 7,063ஆக இருந்த இதன் எண்ணிக்கை 2023-இல் 8,248-ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சில இயக்கங்கள் இந்தக் கொலைச் சம்பவங்களை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டின் அதிபர் டேனியல் நொபோவா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.