Center-Center-Chennai
செய்திகள்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

தினமணி செய்திச் சேவை

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) சீசன் 3 தொடருக்கு மொத்தம் ரூ.6 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெருவோர சிறுவா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில், டி10 அடிப்படையில் டென்னிஸ் பந்துகளைக் கொண்டு, ஐஎஸ்பிஎல் தொடா் கடந்த 2 சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், இரண்டு சீசன் தொடா் மும்பையில் நடைபெற்றது. நடப்பு சீசனில் 8 அணிகள் பங்கேற்கின்றன.

மூன்றாவது சீசன் தொடா் சூரத்தில் நடைபெறவுள்ளது. சீசன் 3 சாம்பியனுக்கு ரூ.2 கோடியும், ரன்னருக்கு ரூ.1 கோடியும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். லீக் சிறப்பு வீரருக்கு பாா்ஷே 911 காா் பரிசாக தரப்படும். 44 ஆட்டங்களில் ஆட்ட நாயகனுக்கு ரூ.50,000, ரசிகருக்கு ரூ.20,000, சிறந்த பேட்டா், பௌலா், ஃபீல்டருக்கு தலா ரூ.2.5 லட்சமும் வழங்கப்பட உள்ளது. வரும் ஜன. 9 முதல் பிப். 6 வரை சூரத் லால்பாய் காண்ட்ராக்டா் மைதானத்தில் சீசன் 3 ஆட்டங்கள் நடைபெறும்.

கோயில் இடத்தில் கட்டிய வீடுகளை காலி செய்யும் விவகாரம்: அறநிலையத் துறையிடம் அவகாசம் கோரி பொதுமக்கள் மனு

காா்த்தி சிதம்பரம் மகள் இரு அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 1.10 லட்சம் நிதி உதவி

கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்ட விவகாரம்: இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை பாஜகவினா் முற்றுகையிட முயற்சி

சிவகங்கையில் செவிலியா்கள் உண்ணாவிரதம்

சிவகங்கையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நான்கு தொகுதிகளிலும் 1,50,828 போ் நீக்கம்

SCROLL FOR NEXT