ஆடவர் கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபாவின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தப் பட்டியலில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா இரண்டாமிடம் வகிக்க, ஸ்பெயின் முதலிடத்தில் இந்த ஆண்டினை முடிக்கிறது.
டாப் 10 அணிகளில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் சில அணிகளில் மாற்றங்கள் நடந்துள்ளன.
வியட்நாம் அதிகபட்சமாக மூன்று இடங்கள் முன்னேறி 107ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மலேசியா ஐந்து இடங்கள் கீழிறங்கியுள்ளது.
கடைசியாக நவ.19ஆம் தேதி இந்தப் பட்டியல் வெளியாக, அடுத்த அப்டேட் ஜன.19ஆம் தேதி வெளியாகிறது.
மொத்தமாக 210 இடங்களில் இந்திய அணி 143-ஆவது இடத்தில் இருக்கிறது.
அடுத்தாண்டு உலகக் கோப்பை வரவிருக்கும் நிலையில் இதுவரை 43 அணிகள் தேர்வாகியுள்ளன.
ஃபிஃபா தரவரிசைப் பட்டியல்
1. ஸ்பெயின் - 1877.18 புள்ளிகள்
2. ஆர்ஜென்டீனா - 1873.33 புள்ளிகள்
3. பிரான்ஸ் - 1870 புள்ளிகள்
4. இங்கிலாந்து - 1834.12 புள்ளிகள்
5. பிரேசில் - 1760.46 புள்ளிகள்
6. போர்ச்சுகல் - 1760.38 புள்ளிகள்
7. நெதர்லாந்து - 1756.27 புள்ளிகள்
8. பெல்ஜியம் - 1730.71 புள்ளிகள்
9. ஜெர்மனி - 1724.15 புள்ளிகள்
10. குரேஷியா - 1716.88 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.