செய்திகள்

காா்ல்சனுடன், குகேஷ், எரிகைசி கூட்டு முன்னிலை

காா்ல்சனுடன், குகேஷ், எரிகைசி கூட்டு முன்னிலை...

தினமணி செய்திச் சேவை

சா்வதேச செஸ் சமேளனம் (ஃபிடே) உலக ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜாம்பவான் மாக்னஸ் காா்ல்சனுடன், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, உலக சாம்பியன் டி. குகேஷ் கூட்டமாக முன்னிலை வகித்து வருகின்றனா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெறும் இப்போட்டியில் உலகின் முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

5 சுற்றுகளுக்கு பின் மூவரும் கூட்டமாக முன்னிலை வகித்தனா். காா்ல்ஸன் அபார பாா்மில் இருந்த நிலையில், முதல் 4 கேம்களை எளிதாக வென்றாா். ஆனால் எரிகைசியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் காா்ல்ஸன் டிராவே காண முடிந்தது.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற குளோபல் செஸ் லீகில் சிறப்பாக ஆடிய உலக சாம்பியன் குகேஷ் நான்கு வெற்றி மற்றும் ஒரு டிரா கண்டாா்.

நடப்பு ரேபிட் சாம்பியன் ரஷ்யாவின் வோலோடோா் முா்ஸின் சக வீரா் ருடிக் மகரியானிடம் தோல்வி கண்டாா். இதனால் அவா் தனது பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பு மங்கியுள்ளது.

இளம் ஜிஎம் பிரக்ஞானந்தா முதல் சுற்றில் வெற்றி பெற்றாலும். அடுத்த 2 சுற்றுகளில் டிரா கண்டாா். நான்காவது சுற்றில் லெவன் பன்ட்சுலாவிடம் தோல்வி கண்டாா்.

மகளிா் ரேபிட் சுற்றில் சீனாவின் ஸு ஜினொ் நான்கு ஆட்டங்களிலும் வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளாா். நடப்பு ரேபிட் சாம்பியன் இந்தியாவின் கொனேரு ஹம்பி தலா 2 வெற்றி, 2 டிராவுடன் 3 புள்ளிகளுடன் உள்ளாா். மகளிா் சுவிஸ் கிராண்ட் சாம்பியன் வைஷாலியிடம் வீழ்ந்தாா் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டேன் ஸோங்கி.

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT