பார்சிலோனா, ரியல் மாட்ரிட் இலச்சினை படங்கள்: எக்ஸ் / பார்சிலோனா, ரியல் மாட்ரிட்
செய்திகள்

கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி..! இந்தியாவில் நடைபெறும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி!

எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.

DIN

எல் கிளாசிக்கோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.

உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்களை இரண்டாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவினர் பார்சிலோனா பக்கமும் மற்றொரு பிரிவினர் ரியல் மாட்ரிட் பக்கமும் இருப்பார்கள்.

மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கும் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கும் விளையாடி அவர்கள் போட்டி என்றாலே எல் கிளாசிக்கோ என்ற அளவுக்கு புகழ்பெற்றுள்ளது.

தற்போது, மெஸ்ஸி இன்டர் மியாமி அணியிலும் ரொனால்டோ அல் நசீர் அணியிலும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பார்சிலோனா - ரியல் மாட்ரிட் போட்டிகள் நவி மும்பையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள், லெஜெண்டுகள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள்.

போர்ச்சுகளின் லூயிஸ் பிகோ, பிரேசிலின் உலகக் கோப்பை வெற்றியாளர் ரிவால்டோ, ஸ்பானிஷின் பெர்னாண்டோ மொரினிட்ஸ் தொடக்கப் போட்டியில் விளையாடுகிறார்கள்.

ஏப்.6ஆம் தேதி, நவி மும்பையில் டி.ஒய்.பாட்டீல் திடலில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.

இந்தப் போட்டியில் இன்னும் கூடுதலாக பல லெஜண்டுகள் வருவார்கள் என போட்டியை நடத்தும் தி ஸ்போர்ட் ஃபிரன்ட் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT