யானிக் சின்னர் படம்: எக்ஸ் / யானிக் சின்னர்
செய்திகள்

ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!

பிரபல டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

DIN

பிரபல டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பு லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்கள் பெயா்களை, சா்வதேச அளவில் விளையாட்டுத் துறை சாா்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன.

பின்னா், லாரியஸ் உலக விளையாட்டு அகாதெமியை சோ்ந்த 71 உறுப்பினா்கள் வாக்களிப்பதன் அடிப்படையில், விருது பெறும் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

சுமார் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஊக்க மருத்து சோதனையில் பாசிட்டிவ் வந்ததால் 3 மாதத்துக்கு டென்னிஸ் போட்டிகளில் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிப்.9 முதல் மே.4ஆம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி கோப்பையை சமீபத்தில் தக்கவைத்துக் கொண்டார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் 23வயதாகும் யானிக் சின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை தவறவிடமாட்டர். ஏனெனில் அடுத்த பிரன்ச் ஓபன் மே.25ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

கடந்தாண்டு நோவக் ஜோகோவிச் லாரியஸ் விருதுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றார்.

வரும் திங்கள் கிழமை (மார்ச்.3) இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

SCROLL FOR NEXT