ரியல் மாட்ரிட் அணி வீரர் வினிசியஸ் ஜூனியருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மார்டிட் அணியும் வலென்சியா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 79ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் வின்சியஸ் எதிரணி கோல் கீப்பரை முரட்டுத் தனமாக தள்ளுவார்.
அதனால் நிலைதடுமாறிய வலென்சியா கோல் கீப்பர் ஸ்டோல் டிமிட்ரீவ்ஸ்கி கீழே விழுவார். இதற்காக வின்சியஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
அதற்கு வின்சியஸ் மிகவும் கோபமாக நடுவருடன் வாதிட முனையும்போது சகவீரர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி அழைத்து சென்றனர்.
இந்த நிகழ்வுக்கு முன்புவரை 1-0 என வலென்சியா முன்னிலையில் இருக்கும். அடுத்து சில நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அசத்தலாக விளையாடி 85’, 90+6’ நிமிடங்களில் முறையே லூக்கா மாட்ரிச், ஜூட் பெல்லிஹாம் இரண்டு கோல்களை அடித்து அசத்துவார்கள்.
2-1 என ரியல் மாட்ரிட் திரில் வெற்றி பெறும். முதல் பாதிலியிலேயே கோல் அடித்த வலென்சியா அணியின் பிற்பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
போட்டி முடிந்த பிறகு வினிசியஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “மன்னிக்கவும், அணிக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
ரியல் மாட்ரிட் 19 போட்டிகளில் விளையாடி 43 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. பார்சிலோனா 38 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.