யானிக் சின்னர் படம்: ஏபி
செய்திகள்

இளம் வயதில் புதிய சாதனை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்!

ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் ஷெல்டனை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் யானிக் சின்னர்.

DIN

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டனை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரராக இருக்கும் சின்னா் 7-6 ( 7-2), 6-2, 6-2 என்ற நோ் செட்களில், ஷெல்டனை வீழ்த்தினார்.

சின்னா் - ஷெல்டன் இதுவரை 6 முறை மோதியிருக்க, அதில் சின்னா் 5 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அரையிறுதியில் ஜோகோவிச் காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்வெரெவ் இறுதிப் போட்டிக்கு தேர்வாகினார்.

சாதனை படைத்த சின்னர்

23 வயதாகும் சின்னர் தொடர்ச்சியாக ஆஸி. ஓபன் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 1993இல் ஜிம் கொரியர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2024-இன் யுஎஸ் ஓபன், ஆஸி. ஓபன் இறுதிப் போட்டிகளில் விளையாடி இரண்டிலும் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ள சின்னர் மீண்டும் பட்டத்தை தக்கவைக்க போராடுவார். ஜனவரி 26ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது.

கடந்த 2 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று பட்டத்தை தவறவிட்ட ஸ்வெரெவ் இந்தமுறை கோப்பையை வெல்ல ஆர்வமாக இருக்கிறார்.

கடந்தாண்டு அக்.2ஆம் தேதி முதல் சின்னர் தோல்வியே சந்திக்காமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நாளை (ஜன.25) கீஸ்-சபலென்கா இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

SCROLL FOR NEXT