முதல் சாம்பியன் பட்டதை வென்றார் சின்னர்!  படம் | ஏபி
செய்திகள்

விம்பிள்டன்: முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார் சின்னர்!

விம்பிள்டனில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா். விம்பிள்டன் வென்ற முதல் இத்தாலிய வீரராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை 3 மணிநேரம், 3 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபனில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சின்னருக்கு, விம்பிள்டன் போட்டியில் இது முதல் சாம்பியன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பை.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT