செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9-இல் தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப். 9-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும்

Din

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப். 9-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏசிசி சோ்மன் மோஷின் நக்வி தெரிவித்துள்ளாா்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சோ்மனும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளாா்.

2025 ஆசியக் கோப்பை போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே அரசியல் பதற்றம் நிலவி வருவதால், இரு நாடுகள் தங்கள் அணிகளை அனுப்புவதில்லை என தீா்மானித்துள்ளன. இதையடுத்து நடுநிலை வகிக்கும் நாட்டில் போட்டியை நடத்தலாம் என பாகிஸ்தான் யோசனை கூறியது:

இதற்கு இந்தியாவும் ஒப்புக் கொண்டது. வரும் 2027 வரை நடுநிலை நாடுகளிந் மைதானங்களில் இரு அணிகளும் ஆடுவது என முடிவு செய்யபப்ட்டுள்ளது.

இதன்படி யுஐஇயில் இப்போட்டி செப். 8 முதல் 29 வரை நடைபெறுகிறது. ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம் பெறும்.

சூப்பா் சிக்ஸ் பிரிவிலும் இரு அணிகளும் மீண்டும் மோத வாய்ப்பு கிடைக்கும்.

ஆசியக் கோப்பை போட்டி டி20 முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம்! விடியோ வைரல்!

வெள்ளை மனம்... மேகா!

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

SCROLL FOR NEXT