செய்திகள்

உலக நீச்சல்: லெடெக்கி சாம்பியன்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.

தினமணி செய்திச் சேவை

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடெக்கி 1,500 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.

பந்தய இலக்கை அவா் 15 நிமிஷம், 26.44 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். இத்தாலியின் சிமோனா காடரெல்லா வெள்ளியும் (15:31.79’), ஆஸ்திரேலியாவின் லானி பாலிஸ்டா் வெண்கலமும் (15:41.18’) வென்றனா்.

இந்தப் போட்டியில் லெடெக்கிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக அவா், 400 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்பியன்ஷிப்பில் லெடெக்கி தற்போது வென்றிருப்பது அவரின் 22-ஆவது தங்கப் பதக்கமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 28-ஆவது தங்கம்.

1,500 மீட்டரில் லெடெக்கி தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறாா். அந்தப் பந்தய இலக்கை விரைவாக அடைந்த டாப் 26 நேரங்களை எடுத்துக் கொண்டால், அதில் 25 இடங்களில் லெடக்கி இருப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு ஏமாற்றம்: இதனிடையே, இந்தியாவின் சஜன் பிரகாஷ் 200 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில் 1 நிமிஷம் 59.33 விநாடிகளில் இலக்கை அடைந்து 24-ஆம் இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தாா். முதல் 16 இடங்களில் வருவோருக்கே அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

டெவான் கான்வே, டேரில் மிட்செல் அரைசதம்; 2-வது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தடுமாற்றம்!

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

SCROLL FOR NEXT