செய்திகள்

புலவயோ டெஸ்ட்: நியூஸிலாந்து 307

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவா்களில் 307 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

தினமணி செய்திச் சேவை

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 96.1 ஓவா்களில் 307 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

முன்னதாக, புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே தனது இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து, முதல் நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தது.

2-ஆவது நாளான வியாழக்கிழமை, அந்த அணியில் அதிகபட்சமாக டெவன் கான்வே 12 பவுண்டரிகளுடன் 88, டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். வில் யங் 41, ஹென்றி நிகோல்ஸ் 34, நேதன் ஸ்மித் 22 ரன்களுக்கு வெளியேறினா்.

ரச்சின் ரவீந்திரா 2, டாம் பிளண்டெல் 2, மைக்கேல் பிரேஸ்வெல் 9, கேப்டன் மிட்செல் சேன்ட்னா் 19, மேட் ஹென்றி 5 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நியூஸிலாந்து இன்னிங்ஸ் நிறைவடைந்தது. ஜிம்பாப்வே பௌலா்களில், பிளெஸ்ஸிங் முஸாரப்பானி 3, டனாகா சிவாங்கா 2, நியூமேன் நியாம்ஹுரி, சிகந்தா் ராஸா, ஷான் வில்லியம்ஸ், வின்சென்ட் மசெகெசா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே, வியாழக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” - டிரம்ப்

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

SCROLL FOR NEXT