கோல் அடித்த மகிழ்ச்சியில் லாமின் யமால்.  படம்: ஏபி
செய்திகள்

சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!

17 வயது கால்பந்து வீரர் லாமின் யமால் குறித்து...

DIN

”பிரான்ஸுடன் வென்றால்தான் விருது தருவார்களெனில் அதையும் செய்வேன்” எனக் கூறி, சொன்னபடியே சிறப்பாக விளையாடிய லாமின் யமால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீரர் லாமின் யமால் பேலந்தோர் (தங்கப் பந்து) விருதுக்கு முதன்மையான தேர்வாக மாறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரர்களுக்கு பேலந்தோர் (தங்கப் பந்து) வழங்கப்படுகிறது. கால்பந்து உலகில் மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படுகிறது.

லியோனல் மெஸ்ஸி இந்த விருதை 8 முறை வென்று அசத்தியுள்ளார். ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார்.

அடுத்தாண்டு பேலந்தோர் விருதை யார் வெல்லுவார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

யாருக்கு தங்கப் பந்து விருது?

இந்தாண்டு தொடக்கத்தில் ரபீனியாவும் முகமது சாலாவும் இந்த விருதுக்கான போட்டியில் இருந்தார்கள்.

கடைசியில் அவர்கள் சொதப்பவே இறுதியில், சாம்பியன்ஸ் லீக்கை வென்ற பிஎஸ்ஜி அணி வீரர்கள் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் வீரர் டெம்பெலே மீது கவனம் சென்றுள்ளது.

சமீபத்தில் இது குறித்த லாமின் யமாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவரிடம், “பிரான்ஸுடனான போட்டியில் வெல்பவருக்கா அல்லது ஓராண்டு முழுவதும் நன்றாக விளையாடியதற்கா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு யமால், “என்னைப் பொறுத்தவரை ஒரு சீசன் முழுவதும் நன்றாக விளையாடியவர்களுக்குதான் தர வேண்டும். சரி, பிரான்ஸுடனான போட்டியில் வெல்பவர்களுக்குதான் என்றால் அப்படியே செய்யட்டும். அதையும் பார்க்கலாம்” எனக் கூறினார்.

சொன்னபடியே வென்ற லாமின் யமால்

பிரான்ஸுடன் ஸ்பெயின் நேஷன்ல் லீக் அரையிறுதியில் மோதியது. இதில், 5-4 என ஸ்பெயின் வென்றது.

இந்தப் போட்டியில் லாமின் யமால் 2 கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

நெய்மர் மாதிரி திறமையும் மெஸ்ஸி மாதிரி ஆற்றலையும் ரொனால்டோ மாதிரி தன்முனைப்பும் ஒருங்கே கொண்டவராக லாமின் யமால் இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

சாம்பியன்ஸ் லீக்கிலும் லாமின் யமால் சிறப்பாகவே விளையாடினார். சொன்னதுபோலவே பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT