மாக்னஸ் கார்ல்சென் படம்: எக்ஸ்/ Norway Chess / Tor Nilssen & Kjetil V. Tveito
செய்திகள்

7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியனான கார்ல்சென்!

மாக்னஸ் கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

DIN

உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

நார்வேயில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் மாக்னஸ் கார்ல்சென் அர்ஜூன் எரிகைசியுடன் விளையாடினார்.

இந்தப் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய கார்ல்சென் தொடர்ச்சியாக 53-ஆவது நகர்த்தலில் இருந்து செக் வைத்தார். அர்ஜூன் எரிகைசிக்கு வேறு வழியில்லாமல் அவரது 56-ஆவது நகர்த்தலில் போட்டி டிராவில் முடிந்தது.

குகேஷ் முன்னாள் சாம்பியன் கரானாவுடன் தோல்வியுற்றதால் கார்ல்சென் சாம்பியனாக மாறினார்.

பெண்கள் பிரிவில் உக்ரைனின் அனா முஸிஷுக் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஓபன் பிரிவில் கடைசி சுற்றுக்குப் பிறகு புள்ளிப் பட்டியல்

1. மாக்னஸ் கார்ல்சென் - 16 புள்ளிகள்

2. ஃபபியானோ கரானா - 15.5 புள்ளிகள்

3. டி. குகேஷ் - 14.5 புள்ளிகள்

4. ஹிகரு நகமுரா - 14 புள்ளிகள்

5. அர்ஜுன் எரிகைசி - 13 புள்ளிகள்

6. வெய் யி - 9.5 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

திருக்கழுக்குன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஒன்றியக்குழு உறுப்பினா் தா்னா போராட்டம்

வடமாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

SCROLL FOR NEXT