ரொனால்டோ, மெஸ்ஸி.  ENS
செய்திகள்

மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடுவேன்: ரொனால்டோ

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது...

DIN

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வருமெனக் கூறியுள்ளார்.

கால்பந்து உலகில் தற்போது ரொனால்டோ, மெஸ்ஸிக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதேபோல் இருவரது ரசிகர்களும் எப்போதும் எதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

ரொனால்டோ அதிக கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார். மெஸ்ஸி கோல்கள் அசிஸ்ட்ஸ் பட்டியலில் அவரை முந்தியுள்ளார்.

இருவரும் லா லீகா தொடரில் விளையாடிய காலங்கள் மிகவும் பொற்காலமாக இருந்தன.

மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கும் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கும் விளையாடினார்கள்.

தற்போது, மெஸ்ஸி அமெரிக்காவில் இன்டர் மியாமி அணிக்காகவும் ரொனால்டோ சௌதியில் அல்-நசீர் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

இன்றிரவு நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறியாதாவது:

எனக்கும் மெஸ்ஸி மீது அன்பு இருக்கிறது. நாங்கள் 15 ஆண்டுகளாகப் போட்டியாளர்களாக இருந்து வருகிறோம்.

மெஸ்ஸி சரியாக ஆங்கிலம் பேசாததால் அவருக்காக காலா நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்.

மெஸ்ஸி எப்போதும் என்னை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார். நானும் அதேபோல் அவரை நடத்துகிறேன்.

எனக்கும் ஆர்ஜென்டீனாவுக்கும் சிறப்பான பந்தம் இருக்கிறது. எனது மனைவி ஆர்ஜென்டீனாதான். அதனால், எனக்கும் அந்த நாட்டின் மீது நேசம் இருக்கிறது.

நாங்கள் இணைந்து விளையாடுவோமா என்பது தெரியவில்லை. எனக்கு 40 வயதாகிறது. எப்போதும் முடியாது எனக் கூறமாட்டேன். நமக்குத் தெரியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

புதிய ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும்: கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனம்

Vijayக்கும் திமுகவுக்கு ரகசிய தொடர்பு?; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 02.10.25

அன்பிற்கினியாள் ✨🌸... ரஷ்மிகா!

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!

SCROLL FOR NEXT