நீ சிரித்து நான் பார்த்ததில்லை! எப்ஸ்டீன் பற்றி கேட்ட பெண் செய்தியாளருக்கு டிரம்ப் பதில்!
நீ சிரித்து நான் பார்த்ததில்லை என்று எப்ஸ்டீன் கோப்புகள் பற்றி கேள்வி கேட்ட பெண் செய்தியாளருக்கு டிரம்ப் பதில்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என்றுதான் எண்ணுகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பதிலால் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
பாலியல் குற்றவாளியுடன் தொடர்புடைய முக்கியமான ஆவணங்களை, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் நிலையில், அது பற்றி தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளர் கவலை தெரிவித்ததுடன், கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான பெரும் பணக்காரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே மரணமடைந்த நிலையில், அவரது வழக்கு விசாரணை ஆவணங்கள் வெளியாகியிருப்பது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதாகவும் அவர் கூறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
சாட்சியங்களின் நேர்காணல்கள் மறைக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் பதிலளித்ததற்கு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற நினைக்கிறார்களே அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எப்ஸ்டீன் பற்றிய கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய டிரம்ப், இது தவிர நாட்டு நலன் தொடர்பான கேள்விகளை எழுப்பலாம். நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் மக்களின் நலன் குறித்து பேசலாம் என்றார்.
இதனைக் கேட்டதும் பெண் செய்தியாளர் கேள்வி எழுப்ப எத்தனித்தபோது, நீங்கள் மிக மோசமான செய்தியாளர், உங்களைப் போன்றவர்களால்தான் உங்கள் செய்தி நிறுவனத்துக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என்றுதான் நினைக்கிறேன், கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு முறை கூட நீங்கள் சிரித்து உங்களை நான் பார்த்ததில்லை. நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள் என்றால், நீங்கள் உண்மையைப் பேசுவதில்லை என்று டிரம்ப் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து, தனியார் ஊடக நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. தங்களது செய்தியாளர், ஒரு சிறப்பானவர், எப்போதும் உண்மையான ஆழமான செய்திகளை தொகுத்து வழங்குவார் என்று குறிப்பிட்டுள்ளது.
செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிரம்ப் பேசியது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
Trump responds to female reporter who asked about Epstein files by saying, "You're laughing, I've never seen it."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.