கிறிஸ்டியானோ ரொனால்டோ, லாமின் யமால்.  படங்கள்: ஏபி
செய்திகள்

முதன்முதலாக லெஜண்ட் ரொனால்டோவை எதிர்கொள்ளும் இளம்புயல் யமால்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி குறித்து...

DIN

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணியும் ஸ்பெயின் அணியும் மோதுகின்றன.

இந்த இரு அணிகளின் நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும் (40) லாமின் யமாலும் (17) மோதுகிறார்கள்.

ரொனால்டோ தனது முதல் போட்டியை 2003-இல் தொடங்கினார். லாமின் யமால் பிறந்ததே 2007-ஆம் ஆண்டுதான் என்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முதலாக இறுதிப் போட்டியில் மோதும் இந்த இரு வீரர்களுக்காக உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நேஷ்னல் லீக் அரையிறுதியில் ஸ்பெயினின் லாமின் யமால் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவும் அரையிறுதியில் முக்கியமான நேரத்தில் கோல் அடித்து அசத்தினார்.

பார்சிலோனா ரசிகர்கள் லாமின் யமாலுக்கும் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் ரொனால்டோவுக்கும் ஆதரவு தெரிவிப்பதால் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி லைவில் இந்தப் போட்டியை நேரலையாகப் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT