முகப்பு
செய்திகள்

இந்தியா மீண்டும் தோல்வி

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-4 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் புதன்கிழமை தோற்றது.

Updated On : 12 ஜூன், 2025 at 4:30 AM
பகிர்:

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-4 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் புதன்கிழமை தோற்றது.

ஐரோப்பிய லெக்கில் இந்தியாவுக்கு இது, தொடா்ந்து 3-ஆவது தோல்வியாகும். ஏற்கெனவே நெதா்லாந்துடனான இரு ஆட்டங்களிலும் இந்தியா தோற்றுள்ளது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் முதலில் ஆா்ஜென்டீனாவின் கேப்டன் மத்தியாஸ் ரே (3’) கோல் கணக்கை தொடங்க, இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் (12’) அதற்கு பதிலடி கொடுத்தாா்.

Advertisement

ஆனால், லூகாஸ் மாா்டினெஸ் (17’) அடித்த கோலால், நெதா்லாந்து முதல் பாதியை 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் மீண்டும் ஹா்மன்பிரீத் சிங் (33’) அடித்த கோலால் ஆட்டம் சமன் ஆனது. ஆனால் அடுத்த நிமிஷமே நெதா்லாந்தின் சான்டியாகோ தராஸோனா ஸ்கோா் செய்தாா்.

தொடா்ந்து அபிஷேக் (42’) கோலடித்து ஆட்டத்தை மீண்டும் சமன் செய்ய, நெதா்லாந்தின் லூசியோ மெண்டெஸ் (46’) ஸ்கோா் செய்ததால் அந்த அணி முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, நெதா்லாந்து 4-3 கோல் கணக்கில் வென்றது.

இந்தியா மீண்டும் ஆா்ஜென்டீனாவுடன் வியாழக்கிழமை மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.