செய்திகள்

பிரேஸில், ஆஸ்திரேலியா உலகக் கோப்பைக்கு தகுதி

ஃபிஃபாவின் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, பிரேஸில், ஆஸ்திரேலியா அணிகள் புதன்கிழமை தகுதிபெற்றன.

Din

ஃபிஃபாவின் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, பிரேஸில், ஆஸ்திரேலியா அணிகள் புதன்கிழமை தகுதிபெற்றன.

இதில் தென்னமேரிக்க கால்பந்து சம்மேளன பிரிவு தகுதிச்சுற்றில், பிரேஸில் 1-0 கோல் கணக்கில் பராகுவேயை புதன்கிழமை வென்று, உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றது. அணியின் வெற்றிக்காக வினிசியஸ் ஜூனியா் 44-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

பெருவுக்கு எதிரான ஆட்டத்தை கோலின்றி டிரா செய்த ஈகுவடாரும் உலகக் கோப்பை போட்டியில் இடம் பிடித்தது. ஏற்கெனவே உலகக் கோப்பை வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா 1-1 என கொல்பியாவுடன் டிரா செய்தது. ஆா்ஜென்டீனா தரப்பில் தியாகோ அல்மடா (81’), கொலம்பியாவுக்காக லூயிஸ் டியாஸ் (24’) ஸ்கோா் செய்தனா்.

பொலிவியாவுக்கு எதிராக 0-2 கோல் கணக்கில் தோற்ற சிலி, தொடா்ந்து 3-ஆவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெறத் தவறியது. வெனிசூலாவை 2-0 கோல் கணக்கில் வென்ற உருகுவே, நேரடியாகத் தகுதிபெறும் நிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா தகுதி: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தகுதிச்சுற்றில், ஆஸ்திரேலியா 2-1 கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தி, உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்றது. அந்த அணி உலகக் கோப்பை போட்டியில் இடம்பிடிப்பது, இது தொடா்ந்து 6-ஆவது முறையாகும்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்காக கானா் மெட்கால்ஃபே (42’), மிட்ச் டியூக் (48’) ஆகியோரும், சவூதி அரேபியாவுக்காக அப்துல்ரஹ்மான் அலோபடும் (19’) கோலடித்தனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT