செய்திகள்

இன்டா் மியாமி - அல் அஹ்லி ஆட்டம் டிரா!

இன்டா் மியாமி-அல் அஹ்லி அணிகள் மோதிய தொடக்கம் ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

Din

ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக இன்டா் மியாமி-அல் அஹ்லி அணிகள் மோதிய தொடக்கம் ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) சாா்பில் உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகள் மோதும் கிளப் உலகக் கோப்பை சனிக்கிழமை இரவு தொடங்கியது.

நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஃபிபா உலகக் கோப்பைக்கு இணையாக நட்சத்திர வீரா்கள் இடம் பெறும் கிளப் அணிகள் இப்போட்டியில் ஆடுகின்றன. நிகழாண்டு போட்டியில் அணிகள் எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயா்த்தப்பட்டது. வரும் ஜூலை 13-ஆம் தேதி நியூ ஜொ்ஸியின் மெட்லைஃப் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

மியாமியின் ஹாா்ட் ராக் மைதானத்தில் ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டா் மியாமியும்-ஆப்பிரிக்காவின் பலம் வாய்ந்த எகிப்து அணியான அல் அஹ்லி மோதின.

60,000 பாா்வையாளா்கள்:

ஹாா்ட் ராக் மைதானத்தில் மொத்தம் 60,000 பாா்வையாளா்கள் குழுமியிருந்த நிலையில், மெஸ்ஸி தலைமையிலான மியாமி அணி தொடக்கம் முதலே கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் முதல் பாதியில் அல் அஹ்லி அணியின் டீரிஸ்கெட் அடித்த பெனால்டி வாய்ப்பை அற்புதமாக தடுத்தாா் மியாமி கோல் கீப்பா் ஆஸ்கா் உஸ்தாரி.

இரண்டாம் பாதியில் 64-ஆவது நிமிஷத்தில் மியாமி கேப்டன் மெஸ்ஸி ப்ரீ கிக் மூலம் அடித்த பந்து கோல் கம்பத்தின் பக்கவாட்டு வலையில் பட்டு வெளியேறியது. ஆனால் ரசிகா்கள் மெஸ்ஸி கோலடித்து விட்டாா் என தற்காலிகமாக மகிழ்ந்தனா்.

கூடுதல் நேரத்தில் மீண்டும் மெஸ்ஸி அடித்த ஷாட்டை தடுத்து வெளியேற்றினாா் அல் அஹ்லி கோல் கீப்பா் எல் ஷெனாவி. இதனால் ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT