ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைக்கான இலச்சினையை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். படம்: எக்ஸ் / உதயநிதி ஸ்டாலின்.
செய்திகள்

தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை போட்டிகள் குறித்து...

DIN

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைக்கான இலச்சினையை தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையை தமிழகத்தில் நடைபெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இலச்சினையையும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணை தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ், எஸ்டிடீஏ செயலாளர் மேகநாத் ரெட்டி ஐஏஎஸ், ஹாக்கி இந்தியாவின் செயலாளர் போலோநாத் சிங், ஹாக்கி இந்தியாவின் பொருளாளர் சேகர் ஜே. மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போட்டிகள் வரும் நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

சென்னை, மதுரையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.

கடைசியாக நடந்த உலகக் கோப்பையை விட கூடுதலாக 8 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டிகள் குரூப் ஆட்டங்கள், நாக் அவுட் சுற்றுகளாக நடைபெறவிருக்கின்றன. இந்தப் போட்டிகளை நடத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மிதுனம்

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

பர்கானுடன்... ராஷி கன்னா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

SCROLL FOR NEXT