கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் திடலில் கிளப் உலகக் கோப்பை பிரிவு ’ஏ’வில் உள்ள இன்டர் மியாமி அணியும் போர்டோ அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 8ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் போர்டோ அணி கோல் அடித்தது.
அடுத்து இரண்டாம் பாதியில் 47ஆவது நிமிஷத்தில் இன்டர் மியாமி அணியின் மிட் பீல்டர் டெலஸ்கோ செகோவியோ கோல் அடித்தார்.
மெஸ்ஸி மேஜிக்
போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. அடுத்து 54-ஆவது நிமிஷத்தில் இன்டர் மியாமி அணிக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸி 20 அடி தூரத்தில் இருந்து தனது மேஜிக்கை நிகழ்த்தினார்.
இன்டர் மியாமி அணி 2-1 என முன்னிலை பெற்றதைக் கடைசி வரை தக்கவைத்துக்கொண்டது.
51 சதவிகிதம் பந்தினை தனது கட்டுக்குள் வைத்த போர்டோ அணி 89 சதவிகித துல்லியமான பந்தினை பாஸ் செய்தும் வெற்றி பெற முடியாமல் சென்றது.
டிராவில் முடிவடைய இந்தப் போட்டியும் மெஸ்ஸியால் வென்றது. இது இன்டர் மியாமிக்கு கிளப் உலகக் கோப்பையில் முதல் வெற்றியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.