உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன் பிரக்ஞானந்தா.  
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை- பிரக்ஞானந்தா சாம்பியன்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை..

DIN

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் தொடரில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 தொடரின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக்கை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்கை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

2 சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா பட்டம் வென்று அசத்தினார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 2778.3 புள்ளிகளுடன் உலக செஸ் நேரடி தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார். ஏற்கெனவே இந்தியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் டி. குகேஷ் 2776.6 புள்ளிகளுடன் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார்.

தற்போது பிரக்ஞானந்தா 4வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக டாப் 5 இடத்திற்குள் இரண்டு தமிழர்கள் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

summary

Praggnanandhaa achieved the feat by winning the UzChess Cup Masters by beating Uzbekistan's Nodirbek Abdusattorov

2-வது டெஸ்ட்: தடுமாறும் வங்கதேசம்; இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக, தவெக புறக்கணிப்பு; அதிமுக, பாஜக பங்கேற்பு!

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி: திருமாவளவன்

அழகுப் பதுமை... அஹானா கிருஷ்ணா!

கடல் அலையின் நடுவே... ஆயிஷா!

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT