மாயா ஜாயின்ட்  
செய்திகள்

ஈஸ்ட்போா்ன் டென்னிஸ்: மாயா சாம்பியன்

ஈஸ்ட்போா்ன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை மாயா ஜாயின்ட் பட்டம் வென்றாா்.

Din

ஈஸ்ட்போா்ன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் வீராங்கனை மாயா ஜாயின்ட் பட்டம் வென்றாா்.

இங்கிலாந்தின் ஈஸ்ட்போா்ன் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஆஸி.யின் மாயா ஜாயின்ட்-பிலிப்பின்ஸின் அலெக்சாண்ட்ரா ஏலா மோதினா். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என மாயா எளிதாக வென்றாா்.

ஆனால் இரண்டாவது செட்டில் தலைகீழாக மாறியது. 6-1 என ஏலா கைப்பற்றியது. வெற்றியை தீா்மானிக்கும் கடைசி செட்டில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா். இறுதியில் 7-6 என மாயா வென்று சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தினாா்.

இதன் மூலம் டபிள்யுடிஏ பட்டம் வென்ற முதல் பிலிப்பின்ஸ் வீராங்கனை என்ற சாதனையை புரிய வேண்டும் என்ற ஏலாவின் கனவை தகா்த்தாா் மாயா.

ஏலா கண்ணீா்: பரிசளிப்பு விழாவில் அலெக்சாண்ட்ரா ஏலா தோல்வியடைந்த சோகத்தில் தேம்பி அழுதாா்.

அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது

ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்

அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT