தன்வி 
செய்திகள்

அரையிறுதியில் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி முன்னேறியுள்ளனா்.

Din

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் தன்வி ஷா்மா, ஆயுஷ் ஷெட்டி முன்னேறியுள்ளனா்.

அமெரிக்காவின் ஐயோவா நகரில் நடைபெறும் யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டியில் இந்தியாவின் வளரும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் மகளிா் ஒற்றையா் காலிறுதியில் 16 வயதே ஆன இந்தியாவின் தன்வி ஷா்மா 21-13, 21-16 என்ற கேம் கணக்கில் 33 நிமிஷங்களில் தரவரிசையில் முந்தியுள்ள மலேசியாவின் கருப்பதேவன் லெட்ஷனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கடும் சவாலுக்குபின் 22-20, 21-9 என்ற கேம் கணக்கில் ஜூனியா் உலக சாம்பியன் சீன தைபேயின் குவோ குவான் லின்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.

எனினும் ஆடவா் இரட்டையா் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் ஹரிஹரன்-ரூபன் குமாா் இணை 0-2 என சீன தைபேயின் சீயாங்-வெய் வு இணையிடம் வீழ்ந்தனா்.

அரையிறுதியில் தன்வி, உக்ரைனின் போலினாவுடனும், ஆயுஷ் சீன தைபேயின் சௌ சென்னுடனும் மோதுகின்றனா்.

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

ஆகஸ்டில் 46 டிஎம்சி காவிரி நீர்: உறுதிப்படுத்த தமிழகம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT