கிளப் உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய 2 அணிகள்!
கிளப் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் குறித்து...
கிளப் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு செல்ஸி, பல்மெய்ராஸ் அணிகள் முன்னேறியுள்ளன.
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
லீக் போட்டிகள் முடிந்து ரவுண்ட் ஆஃப் 16 எனும் நாக் அவுட் சுற்றுக்கான போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பல்மெய்ராஸ் - போடாஃபோகோ அணிகள் மோதின.
Advertisement
இந்தப் போட்டியில் 100-ஆவது நிமிஷத்தில் பல்மெய்ராஸ் அணி வீரர் கோல் அடித்ததால் அந்த அணி 1-0 என த்ரில் வெற்றி பெற்றது.
2-ஆவது ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் பென்ஃபிகாவும் செல்ஸியும் மோதின. இந்தப் போட்டியில் 4-1 என செல்ஸி அபாரமாக வென்றது.
பென்ஃபிகாவில் ஏஞ்சல் டி மரியா மட்டுமே கோல் அடித்தார். அற்புதமாக விளையாடிய செல்ஸி அணி 64 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்தது.
போட்டியில் 12 முறை இலக்கை நோக்கி பந்தினை அடித்த செல்ஸி அணி அதில் 4 கோல்களைப் பெற்றது.
காலிறுதியில் செல்ஸியும் பல்மெய்ராஸ் அணியும் ஜூலை 5ஆம் தேதி மோதவிருக்கின்றன.
Chelsea and Palmeiras have advanced to the quarterfinals of the Club World Cup.