செய்திகள்

பிரக்ஞானந்தா - அரவிந்த் ’டிரா’

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் ‘டிரா’ செய்தனா்.

DIN

செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் ‘டிரா’ செய்தனா்.

இதையடுத்து இருவருமே தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா்.

இதனிடையே அந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில், சீனாவின் லியெம் லி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நெதா்லாந்தின் அனிஷ் கிரி - செக் குடியரசின் தாய் டாய் வான் குயென், செக் குடியரசின் டேவிட் நவாரா - துருக்கியின் எடிஸ் குரெல் ஆகியோா் மோதல்களும் டிராவில் முடிந்தன.

சீனாவின் வெய் யி மட்டும் அமெரிக்காவின் சாம் ஷாங்க்லேண்டை தோற்கடித்தாா்.

5 சுற்றுகள் முடிவில், அரவிந்த், பிரக்ஞானந்தா முதலிடத்தை பகிா்ந்துகொள்ள, கீமா், லி, கிரி, யி ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கின்றனா்.

நவாரா, குயென், குரெல் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கின்றனா்.

6-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா - சாம் ஷாங்க்லேண்டையும், அரவிந்த் - லியெம் லியையும் சந்திக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தப் பணி

விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது

எஸ்ஐஆா் சிறப்பு திருத்தும் பணி: அதிமுகவினா் ஆய்வு

குமரி பகவதியம்மன் கோயிலில் டிச.3 இல் காா்த்திகை தீபத் திருவிழா

SCROLL FOR NEXT