FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த வினிசியஸ்: கொலம்பியாவை வீழ்த்திய பிரேசில்!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியாவை 2-1 என பிரேசில் வீழ்த்தியது.

Updated On : 21 மார்ச் 2025, 11:46 am IST
வெற்றிக் களிப்பில் பிரேசில் அணி வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியாவை 2-1 என பிரேசில் வீழ்த்தியது.

தென்னமரிக்க கால்பந்து கூட்டமைப்பில் மொத்தமாக 10 அணிகள் விளையாடுகின்றன.

18 போட்டிகளில் விளையாடும் இந்த 10 அணிகளில் டாப் 6 அணிகள் தகுதிச் சுற்றுக்கு தேர்வாகும்.

Advertisement

Advertisement

இதில் பிரேசில் அணி கொலம்பியாவை 2-1 என வென்றது. முதலில் பிரேசில் அணியில் ரபீனியா 6ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.

அடுத்ததாக 41ஆவது நிமிஷத்தில் கொலம்பிய வீரர் லூயிஸ் த்யாஸ் கோல் அடிக்க போட்டி சமனானது.

வினிசியஸ், ரபீனியா. - படம்: ஏபி

பின்னர் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 90+9ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் கோல் அடித்து அசத்தினார்.

புள்ளிப் பட்டியலில் 21 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் பிரேசில் இருக்கிறது. ஆர்ஜென்டீனா 25 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments