கபில் தேவ் (கோப்புப் படம்) 
செய்திகள்

செஸ் விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு கிடையாது; கபில் தேவ் கூறுவதென்ன?

செஸ் விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

DIN

செஸ் விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

ஸ்கில்ஹப் ஆன்லைன் விளையாட்டுகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கிராண்ட்மாஸ்டர் சாம்பியன்ஷிப் தொடரின் நிறைவு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்கில்ஹப் ஆன்லைன் விளையாட்டுகள் கூட்டமைப்பின் விளம்பர தூதரான கபில் தேவ் செஸ் விளையாட்டு குறித்து பேசியதாவது: செஸ் போன்ற விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டும் கிடையாது. அவை அறிவாற்றலையும், நினைவாற்றலையும் மேம்படுத்துபவை. இதுபோன்ற விளையாட்டுகள் மன அழுத்தத்தை குறைக்கும் என்றார்.

மற்றொரு விளம்பர தூதரான இரண்டு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பி பேசியதாவது: விளையாட்டுத் துறையில் நாம் பொற்காலத்தை நம் கண் முன்னால் பார்த்து வருகிறோம். உலக செஸ் சாம்பியன் குகேஷ் மற்றும் டாப் 10 வரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டின் எதிர்காலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசமாக உள்ளது என்றார்.

ஸ்கில்ஹப் ஆன்லைன் விளையாட்டுகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கிராண்ட்மாஸ்டர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க 1500-க்கும் அதிகமானோர் தங்களது பெயர்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

பைக் மீது மணல் லாரி மோதல்: மூதாட்டி உள்பட இருவர் பலி

அசத்தும் லோகா! ஹிருதயப்பூர்வம், ஓடும் குதிரை சாடும் குதிரை நிலவரம் என்ன?

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி தோல்வி!

தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT