செய்திகள்

ஐபிஎல்: ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய மின்சக்தி!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சூரிய மின்சக்தி தகடுகள் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அணி அறிவிப்பு

DIN

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சூரிய மின்சக்தி தகடுகள் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வலுவாக உள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த போட்டியில் இளம் வீரர் சூர்யவன்ஷியின் சாதனை சத்தினால் அபார வெற்றி பெற்றது.

வெற்றிப் பயணத்தை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியும், வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளதை தொடரும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களம் காண்கின்றன.

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், பிங்க் ப்ராமிஸ் (Pink Promise) என்ற அறிவிப்பின்படி, 6 வீடுகளுக்கு சூரியத் தகடுகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT