இன்டர் மிலன், பார்சிலோனா வீரர்கள் பந்தினை தலையினால் தடுக்க முற்பட்டபோது... படம்: ஏபி
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: சமனில் முடிந்த பார்சிலோனா - இன்டர் மிலன்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மோதிய பார்சிலோனா - இன்டர் மிலன் ஆட்டம் சமனில் முடிந்தது.

DIN

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மோதிய பார்சிலோனா - இன்டர் மிலன் ஆட்டம் சமனில் முடிந்தது.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியும் இன்டர் மிலன் மோதின.

இந்தப் போட்டியில் 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமனில் முடிந்தது.

இன்டர் மிலன் அணி போட்டியின் முதல் நிமிஷத்திலேயே கோல் அடுத்து அசத்தியது.

அடுத்ததாக கார்னர் வாய்ப்பில் 21, 63ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தியது.

இந்த இரண்டு கோல்களையும் டென்ஜெல் டம்பிரைஸ் கார்னர் வாய்ப்பில் அடித்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அவர் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

பார்சிலோனா அணி கார்னர் வாய்ப்பில் தவறவிட்டாலும் அணியாக சிறப்பாக விளையாடியது.

போட்டியில் 72 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அத்துடன் 91 சதவிகித துல்லியத்துடன் பந்தினை செய்ததும் கவனிக்கத்தக்கது.

முக்கிய வீரர்களுக்கு காயம்

இன்டர் மிலன் அணியின் கேப்டன் லௌடாரோ மார்டினெஸ் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.

பார்சிலோனா அணியில் ஜூல்ஸ் குன்டே காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இரு வீரர்களுமே அந்த அணிகளுக்கு மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

இண்டர் மிலன் அணியின் பலமான டிஃபென்ஸுகளைத் தாண்டி பார்சிலோனா 3 கோல்கள் அடித்தது பெரிய விஷயம் என்றே ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

இந்த இரு அணிகளுக்குமான சாம்பியன் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதி போட்டி மே.7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT