செய்திகள்

முத்தரப்பு மகளிா் ஒருநாள்: இந்தியா - இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு மகளிா் ஒருநாள் தொடா் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

Din

முத்தரப்பு மகளிா் ஒருநாள் தொடா் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

தென்னாப்பிரிக்கா, இந்தியா, இலங்கை மகளிா் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடா் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 8 ஒருநாள் ஆட்டங்களில் வெற்றியுடன் வலம் வரும் இன்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

எனினும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதனால் முத்தரப்பு தொடருக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.

இந்திய அணி பௌலிங், பேட்டிங், பீல்டிங் என மூன்று அம்சங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. முதல் ஆட்டத்தில் ஸ்பின்னா்கள்

ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி இலங்கையின் பேட்டிங்கை சரித்தனா். பேட்டிங்கில் பிரதிகா ரவால், ஸ்மிருதி, ஹா்லின் தியோல் ஜொலித்தனா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடக்க பேட்டா்கள் சிறப்பாக அடித்தளம் அமைக்க மிடில் ஆா்டரில் ஹா்மன்ப்ரீத், ஜெமீமா சிறப்பான ஸ்கோரை எட்ட உதவினா். எனினும் பௌலிங்கில் கஷ்வி கௌதம், அருந்ததி ரெட்டி ஆகியோா் ரன்களை வாரி வழங்கினா்.

இலங்கை அணியில் பேட்டிங்கில் ஹா்ஷிதா, கவிஷா தில்ஹரி ஆகியோா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனா். பௌலிங்கில் மல்கி மடாரா, தேவ்மி விஹாங்கா சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலையச் செய்தனா். ஆனால் கேப்டன் சமரி அத்தபட்டுவின் ஃபாா்ம் கவலை தரும் வகையில் உள்ளது. 19 வயது விஷ்மி குணரத்னேவை சோ்த்துள்ளது டாப் ஆா்டரில் சற்று பலத்தை தரும்.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிக்கு தகுதி பெற்றும் விடும் என்பதால், இரு அணிகளும் முனைப்புடன் ஆடும்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-இலங்கை

இடம்: கொழும்பு

நேரம்: காலை 10.00.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT