வெற்றி மகிழ்ச்சியில் பிஎஸ்ஜி அணியினர் கொண்டாட்டம். சோகத்தில் ஆர்செனல் வீரர்கள். படம்: ஏபி
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: ஆர்செனலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வானது பிஎஸ்ஜி!

சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் ஆர்செனலை வீழ்த்தி பிஎஸ்ஜி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

DIN

சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் ஆர்செனலை வீழ்த்தி பிஎஸ்ஜி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக்கின் 2ஆம் கட்ட அரையிறுதிப் போட்டி பார்க் டெஸ் பிரின்சஸ் திடலில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. 27, 72ஆவது நிமிஷங்களில் பிஎஸ்ஜி அணியினர் கோல் அடித்தனர்.

ஆர்செனல் சார்பாக 76ஆவது நிமிஷத்தில் சாகா ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் 2-1 என பிஎஸ்ஜி வென்றது. ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 3-1 என பிஎஸ்ஜி அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

ஆர்செனல் அணி 55 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் போட்டியில் வெல்ல முடியவில்லை. குறிப்பாக 19 ஷாட்டுகள் அடித்தும் ஒன்றைத் தவிர எதுவுமே கோல்-ஆக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் ஜியான்லூகி டோனாரும்மா சிறப்பாக தடுத்தி அசத்தினார். அக்ரஃப் ஹகிமி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் உடன் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT